வடக்கு மாகாண விவகாரம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் மோசடியில் ஈடுபட்டதாக விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, ஜனாதிபதியிடம் இக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாத்திரமன்றி வடமத்திய மாகாணம் உட்பட சில மாகாண சபைகளில் நிதிப் பயன்பாடு பங்கீடுகளின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்தையே மக்கள் சாடுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், இவை குறித்து ஆராய ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts