வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மரநடுகை மாதம், நேற்று (புதன்கிழமை) வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசனால் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண மர நடுகை கார்த்திகை மாதம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக குறித்த நிகழ்வு மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 25 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வெரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒரு கிராமம் தெரிவு தெரிவு செய்யப்பட்டு பயன் தருகின்ற மரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டவுள்ளது.
குறித்த நிகழ்வில் விவசாய அமைச்சின் பிரதி நிதிகள்,விவசாய திணைக்கள அதிகாரிகள் , கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.