வடக்கு மாகாண மக்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் அறிவித்தல்!!

வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத வாகனங்களின் அனைத்து பதிவுகளும் நீக்கப்படும் என வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 2017 டிசம்பர் 31ஆம் திகதி வரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்களே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் நிலுவையைச் செலுத்தி வரிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் பழுதடைந்த நிலையில் இருக்குமாயின் பிரதேச செயலகத்தில் நிலுவைக் கொடுப்பனைவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மாகாண ஆணையாளர்தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை வாகன உரிமையாளர்கள் மேற்கூறிய எந்த நடவடிக்கையையும் செய்யாதிருப்பின், அந்த வகை வாகனங்களின் பதிவுகள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி மோட்டார் வாகனப் பதிவாளரால் நீக்கப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts