
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் அதிகாலை லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.அவர் மீண்டும் 18ஆம் திகதியே முதலமைச்சர் நாடு திரும்புவார்.
இந்த நிலையில் வடமாகாண பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை(3) காலை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து பதில் முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணத்தினை எடுக்கவுள்ளார்.