வடக்கு மாகாணசபையில் முன்னாள் ஆளுனரான சந்திரசிறியிற்கு ஆதரவாக செயற்பட்டு முதலமைச்சருக்கு தலையிடியை கொடுத்து வந்த பிரதம செயலாளர் திருமதி ஆர் விஜயலட்சுமி மாற்றப்பட்டுள்ளார்.அவர் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று வழங்கப்பட்ட அமைச்சர்களின் செயலாளர்களுக்கான நியமனத்தின் மூலம் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. புதிய வடக்குமாகாண அமைச்சின் செயலாளர் யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அறியவரவில்லை.
ஆளுனருக்கு அடுத்ததாக மத்திய அரசு பிரதிநிதியாக நிர்வாகரீதியில் செல்வாக்கு செலுத்தும் பதவி பிரதம செயலாளர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மத்திய அமைச்சின் செயலாளர் பதவி அதை விட உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.