வடக்கு மாகாண சபை உறுப்பினராக குகதாஸ் நியமனம்?

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

குறித்த உறுப்பினரின் வெற்றிடத்திற்கே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.குகதாஸ் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என கூறப்படுகின்றது.

Related Posts