வடக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியினர் மோதல்!!, எதிக்கட்சியினர் இரசித்து பார்த்தனர்!!!

வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டதால் சபை நடவடிக்கைகள் நேற்று பாதிப்படைந்தன. நீண்ட நாட்கள் நிலவி வந்த பனிப்போர் நேற்றைய தினம் கடுமையாகியதாலேயே சபை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.

முதலமைச்சர் தலைமையில் அவைத் தலைவர் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்த இரு அணிகளும் நேற்று மோதிக் கொண்டன. இதனை எதிக்கட்சியினர் அமைதியாக இருந்து பார்த்து இரசித்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

வடக்கு மாகாணசபையின் மாதாந்த கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது அதன் போது முதலாவதாக பட்டதாரிகள் பிரச்சினையும் அடுத்து முதலமைச்சருக்கு எதிரான உறுப்பினர் பரஞ்சோதியின் கேள்விகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன இதனால் இது வரை காலமும் நிலவி வந்த பணிப்போர் நேற்றைய தினம் முட்டி மோதி வெடித்து கலோபரமானது.

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பட்டதாரிகளின் நியமனங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர விண்ணப்பக் கடிதம் ஒன்றினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் டெனிஸ்வரன் இனப்பிரச்சினை குறித்து சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைப்பது நல்லது எனக் கூறினார்.

இதன் பின்பு எழுந்த உறுப்பினர் சஜயந்தன் எப்போதும் பிரேரணைககள் நிறைவேற்றுவது நல்லதல்ல எனவும் மாகாணசபைக்குள் இருக்கின்ற 37 விடயங்களை பட்டதாரிகளை உள்ளடக்ககப் படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.தனியே பிரேரணைகள் நிறைவெற்றுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை எமது பிரேரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதற்கு ஐ.நா அறிக்கை சிறந்த உதாரணமாகும். நாம் இன அழிப்பு எனக் கூறினோம் அவர்கள் இதனைப்பற்றி குறிப் பிடவில்லை எனக்கூறினார்.

இதன் பின்பு எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வெளிநாட்டு முதலீட்டாளர்களினைக் கொண்டு இங்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறினார்.

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை திறம்பட இயங்குவதாகவும் வேலைவாய்ப்புக்களை வழங்கி வருவதாகவும் சுகாதார அமைச்சர் கூற மோதல் ஆரம்பமானது.

இதன்போது அமைச்சரவை தனது முடிவுகளினை வெளிப்படுத்தவில்லை எனவும், சர்வதிகாரமாக செயற்படுகின்றது எனவும் அவைத் தலைவர் சிவஞானம் அமைச்சரவை மீது பகிரங்கமாக கூற்றம்சாட்டினார்.

இதன் பின்னர் முதலமைச்சரின் விசேட உதவியாளர் கூறித்து உறுப்பினர் பரஞ்சோதியால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு இதுதொடர்பில் பொதுவெளியில் ஆராயப்படுவதனால் அவற்றின் கேள்விகளும் பதில்களும் இராஜதந்திர ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகையினால் இதற்குரிய பதில் உரிய நேரத்தில் கூறப்டும் என் முதலமைச்சர் பதிலளித்தார்.

எனினும் தனக்கு பதில் வேண்டும் என் விடப்பிடயாக பரஞ்சோதி நிற்க அதற்கு அவைத் தலைவரும் ஆதரவு வழங்கினார்.

எனினும் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டிலிருந்து மாற்றமடையாமல் பதில் கூற மறுத்து விட்டார்.

இதன் போது உறுப்பினர்கள் சர்வேஸ்வரன், நான் அமைச்சர்களிடம் கேள்வி கேட்கும் போது முன் அனுமதி பெறவேண்டும் ஆனால் முதலமைச்சரிடம் கேள்வி கேட்கும் போது மட்டும் முன்அனுமதி பெறத் தேவையில்லை என்பது எந்த வகையில் நியாயம் அவைத்தலைவர் தனது பதவிக்கு ஏற்றாப் போல் செயற்படவேண்டும் என ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தினார்.

இதன் பின்னர் அவைத்தலைவர் அமைதியாக மதியநேரத்தை அண்மித்ததும் மோதல்கள் தானாக தணிந்தது.

Related Posts