மாகாணங்களின் தேவைக்கேற்ப மாநிலங்களை உருவாக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்டத்துக்குத் தனது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ.
வடக்கு, தெற்கு என இரு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வட மாகாண சபை தனது அரசமைப்புத் தீர்வை முன்வைத்தது. இந்நிலையில் தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
மாகாண சபைகளின் தேவைக்கு ஏற்ப மாநிலங்களை உருவாக்குதல், இல்லாது செய்தல் போன்ற விடயங்களை செய்ய முடியாது. ‘நல்லாட்சி’ அரசில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளனர். இதனால் எக்காரணம் கொண்டும் வட மாகாண சபையின் திட்டத்தை முன்னெடுக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.