அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு மாகாண சபையிலும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இன்னும் அரை மணி நேரத்தில் கூடவுள்ள வடக்கு மாகாண சபை பெரும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேற்றைய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் 3 மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனால் 8 உறுப்பினர்கள் கொண்ட எதிர்க்கட்சி இனி 5 உறுப்பினர்களுடனே இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேசமயம் அண்மையில் கிழக்கு மாகாண சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து இயங்குவதற்கு முடிவு எடுத்திருந்தமை தெரிந்ததே.