முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை மறுதினம் புதன் கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது.
மாகாணசபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரது பதவிகளும் முடிவுக்கு வந்துவிடும்.
இந்த நிலையில், தமக்குத் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புத் தேவை என்று தெரிவித்து மூன்று உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களில் பொலிஸ் பாதுகாப்பை தற்போது வைத்திருக்கும் உறுப்பினர் ஒருவர், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரே, தமது பதவிக் காலம் முடிந்த பின்னரும் பாதுகாப்புக்குப் பொலிஸார் தேவை என்று விண்ணப்பித்துள்ளனர்.