வடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

விண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு-
தமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27, விவசாயமும் உணவுத் தொழில்நுட்பமும் – 57, வழிகாட்டலும் ஆலோசனையும் – 47, இரண்டாம் மொழி (சிங்களம்) – 78.

விளம்பரத்தினை பார்வையிட

மாதிரி விண்ணப்ப படிவத்தினை பார்வையிட

Related Posts