வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கப்படும்: சுவாமிநாதன்!

வடக்கு மாகாணத்தில் 22ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கான வீட்டுத் திட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related Posts