வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (செவ்வாய்க்கிழமை) உறுதியாகியுள்ளது.

அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 6 பேர் இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்றும் மேலும் மூன்று பேர் இ.போ.சவின் காரைநகர் சாலை நடத்துனர் ஒருவரின் உறவினர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ள ஒருவருக்கும் யாழ். சிறைச்சாலை கைதி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் இருவருக்கும் மன்னார் நகர் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts