வடக்கு மாகாணத்திற்கான நிதியில் 1500 மில்லியன் ரூபா வெட்டு!

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட வரைபில் வடக்கு மாகாணத்துக்கான நிதியில் 1500 மில்லியன் ரூபாவை வெட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டதும், ஏனைய வருமானங்கள் அற்றதுமான வடக்கு மாகாணம் இதனால் திண்டாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர்கள் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாகவும், அச்சந்திப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் திகதி முன்மொழியப்பட்ட வரவு -செலவுத் திட்ட யோசனையூடாக மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லையென முதலமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்தே சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ள மாகாண முதலமைச்சர்கள் தீர்மானத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts