வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 1570 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரச வேலையற்ற பட்டதாரிகளில் இரண்டாம் கட்டமாக நேற்றைய தினம் நாடு பூராகவும் வழங்கப்பட்ட 16 ஆயிரத்து 800 பேருக்கான நியமனத்தில் வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் 1570 பேருக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் மாவட்ட ரீதியில் சேகரிக்கப்பட்டு அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்ற நிலையில் முதல் கட்டமாக 4 ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் 16 ஆயிரத்து 800 பேருக்கு நியமனம் வழங்குவதற்கான பெயர்ப் பட்டியல்கள் சகல மாவட்டச் செயலகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1281 பேரின் பட்டியலும் மன்னார் மாவட்டத்தில் 140 பேரின் பட்டியலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 149 பேரின் பட்டிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே மொத்தம் 1570 பேரின் பெயர் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுற்கான பெயர்ப் பட்டியல் நேற்று மாலை வரையில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts