வடக்கு மாகாணத்தின் முதலாவது நவீன மீன் சந்தை அரியாலையில் திறந்துவைப்பு!

மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

fish market 98455454

அரியாலை தபாற்கட்டை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வு கடற்றொழில் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பொது முகாமையாளர் ருவான் லங்ககோன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உட்பட மீன்பிடித் திணைக்கள உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts