வடக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு அமைச்சுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை!

வடக்கு மாகாணத்தில் முக்கிய அமைச்சாக விளங்கும் புனர்வாழ்வு அமைச்சிற்கு 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சிறிய தொகையொன்றை ஒதுக்கி இத்துறையில் முக்கியமாக முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளில் ஒன்றான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 538 பேருக்கு இருக்கை மலசல கூடம் அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக்கிய அமைச்சான மகளிர் விவகார அமைச்சுக்கு கடந்த வருடம் 10 மில்லியன் ஒதுக்கப்பட்டதெனவும், 2017ஆம் ஆண்டு பெண்களுக்கான பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி அதிகளவாகத் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts