வடக்கு மாகாணசபை வாடகைக்காக மாதாந்தம் செலவிடும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500!

vickneswaranவடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

25.09.2013 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணசபை மற்றும் சபை சார்ந்த அமைச்சுக்களின் காரியாலயங்கள், முதலமைச்சரின் காரியாலயம், ஏனைய திணைக்களங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்களது வதிவிடங்களுக்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டங்கள், வீடுகள் தொடர்பான விடயங்கள், அந்தக் கட்டங்கள், வீடுகளின் விலாசங்கள், உரிமையாளர்களின் பெயர்கள், அவற்றுக்கு கொடுக்கப்படும் வாடகைத் தொகை அத்துடன் முற்பணம் ஏதும் செலுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பான விவரங்களை வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராஜா, முதலமைச்சரிடம் கேள்வியயழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “இந்தக் கேள்வியை எழுப்பியமைக்கு எதிர்கட்சித் தலைவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதன் மூலம் எமது சபை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றது என்பதை வெளிக்காட்ட முடிந்துள்ளது.

இவை யாவும் பிரத செயலாளர் அலுவலகத்தினாலேயே ஒழுங்கமைத்துத் தரப்பட்டன.
பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள், முதலமைச்சரின் வதிவிடம் என்பவற்றுக்காக மாதாந்தம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபா நிதி வாடகையாகச் செலுத்தப்படுகின்றது.என்று தெரிவித்தார்.

அப்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மேற்படி வாடகை விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டுக்கு அமையவா செலுத்தப்படுகின்றது என்று கேள்வியயழுப்பினார். இதற்கு அடுத்த அமர்வில் பதிலளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts