வடக்கு மாகாணசபை வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் வழங்குவதாக வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்றவாறு வழங்கவில்லையென வவுனியா மாவட்ட பொதுமக்கள் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடமாகாணசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் ஐவருக்கு தலா ஒவ்வொரு வருடம் எனப்பகிர்ந்தளிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் முதலாவது வருடம் கு. மேரிகமலாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது அவருடைய பதவிக்காலம் ஒரு வருடம் நிறைவடைந்து மேலதிகமாக மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில்

இரண்டாம் வருடத்துக்குரியவருக்கு பதவிக்காலத்தை வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்றவாறு மாற்றி வழங்கப்படவில்லை எனவும் எனவே ஏனையோருக்கும் பகிர்ந்தளித்து, மக்கள் சேவைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், செயலாளருமாகிய மாவை.சேனாதிராசாவிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

மகஜர் இணைப்பு :-

leter

Related Posts