வடமாகாண பிரதி அவைத் தலைவராக கடமையாற்றிய மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் கடந்த 07 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து வட மாகாண சபைக்கான பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்து குறித்து இன்று கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவராக வட மாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரனை நியமிக்குமாறு வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் அவையில் தெரிவித்தார்.
எனினும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை பிரதி அவைத் தலைவராகத் தெரிவுசெய்யுமாறு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வடமாகாண சபை உறுப்பினரான வல்லிபுரம் கமலேஸ்வரன் 18 வாக்குகளையும் அனந்தி சசிதரன் 13 வாக்குகளையும் நடுநிலையாக 1 வாக்கு பதிவாகியதை அடுத்து வல்லிபுரம் கமலேஸ்வரன் வடமாகாண பிரதி அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை “நான் வெளிநாட்டிலிருந்து வரும் வரை பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யவேண்டாம், நான் வந்த பிறகு தெரிவு செய்கின்றேன்” என்று லண்டனிலிருந்து விக்கினேஸ்வரன் பிரதி முதலமைச்சர் குருகுலராஜாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது.