வடக்கு மாகாணசபைக்குட்பட்ட 6 வைத்தியசாலைகளை தரமுயர்த்த மத்திய அரசு ஒப்புதல்!

வடமாகாண சுகா­தா­ரத் திணைக்­களத்­திற்கு கீழ் உள்ள 6 வைத்­தி­­யசாலை­க­ளைத் தரம் உயர்த்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சு ஒப்­பு­தல் அழித்துள்ளதாக மாகாண சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கீழ் இயங்­கும் 110 வைத்­தி­ய­சா­லை­க­ளில் 6 வைத்­தி­ய­சா­லை­க­ளைத் தரம் உயர்த்­து­வ­தற்காக மாகாண சபை­யில் தீர்­மா­னம் கொண்டுவரப்பட்டு கொழும்பு சுகா­தார அமைச்­சுக்கு அதைச் சமர்ப்­பித்­தி­ருந்­தோம். விரை­வில் அதற்­கான எழுத்து மூல­மான அனு­ம­தி­யும் கிடைக்­கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமர்ப்­பிக்­கப்­பட்ட எமது தீர்­மா­னம் நீண்ட நாள்­க­ளாக அங்கு தேக்­கத்­தில் இருப்­பது தொடர்­பில் கடந்த வாரம் கொழும்பு சுகா­தார அமைச்­சில் அமைச்­சர் தலை­மை­யில் இடம்­பெற்ற சந்­திப்­பில் கேள்வி எழுப்­பி­னாம். அதனையடுத்து குறித்த விடயத்துக்கு வாய் மூல­மான ஒப்­பு­தல் தற்­போது வழங்­கப்­பட்­டுள்­ளது. இதனையடுத்து வைத்தியசாலைகளுக்கான தர­மு­யர்த்­தல் அனு­மதி கிடைக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதற்­கான அனு­மதி எழுத்­தில் கிடைக்­கும் பட்­சத்­தி­லேயே அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யும்.

இந்த அனு­மதி கிடைக்­கும் பட்­சத்­தில் வடக்­கின் 6 வைத்­தி­ய­சா­லை­க­ளான வவு­னியா மாவட்ட வைத்தியசாலையானது மாகாண வைத்­தி­ய­சா­லை­யா­க­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்பு மற்­றும் மல்­லாவி வைத்­தி­ய­சா­லை­கள் தள வைத்­தி­ய­சா­லை­க­ளா­க­வும், பருத்­தித்­துறை வைத்­தி­ய­சாலை மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லை­யா­க­வும் தரம் உயர்த்­தப்­ப­டு­வ­தோடு மன்­னார் மாவட்­டத்­தின் முருங்­கன் மற்­றும் சிலா­வத்­துறை வைத்­தி­ய­சா­லை­க­ளும் தள வைத்­தி­ய­சா­லை­யா­க­வும் தர­மு­யர்த்­தப்­பட்டு அவற்­றுக்­கான வளங்­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts