வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை செய்பவர்களுக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் பாதுகாப்புப் பிரிவினருடனேயே சென்றதாக தெரியவந்துள்ளது எனவும், பிரச்சினை ஏற்படும் வகையில் அவர் செல்லவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts