வடக்கு மக்களை குழப்ப சதி: நம்ப வேண்டாம் என்கிறார் சிவிகே

வட மாகாண மக்களை குழப்பும் வகையில் அரச தரப்பினால் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் வட மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CVK-Sivaganam

மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக அரச தரப்பினால் மக்களை குழப்பும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மாதிரி வாக்குசீட்டுகள் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் பரவாலக மக்களை குழப்பும் வகையில் மைத்திரிபால சிறிசேனாவின் அன்னப்பறவை சின்னத்துக்கு பதிலாக முச்சக்கரவண்டி சின்னத்தை பதிலீடு செய்து விநியோகித்து வருகின்றனர்.

இதானால் மக்களை ஏமாராது அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Related Posts