வடமாகாண தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வடபகுதி மக்களுக்கு வாக்களிப்பு முறை தொடர்பில் தெளிவூட்டும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தை இந்த வாரம் முதலே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தெளிவூட்டல் வேலைத்திட்டத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.