வடக்கு மக்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

வங்­காள விரி­கு­டா­வில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்­கம் வடக்கு மாகா­ணத்தை நோக்கி நகர்­வ­தால் இரு தினங்­க­ளுக்கு பலத்த காற்று வீசு­வ­து­டன் மழை­யும் பெய்­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் இருகின்றன என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக புவி­யி­யல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரி­வித்­தார்.

வங்­காள விரி­கு­டா­வில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்­கம் கார­ண­மாக நாடு முழு­வ­தும் சடு­தி­யான கால­நிலை மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. தாழ­முக்­க­மா­னது தற்போது இலங்­கை­யின் தெற்­குப் பகு­தி­யில் இருந்து வடக்கை நோக்கி நகர்­கி­றது.

காற்­றின் வேகம் இரண்டு நாட்­க­ளுக்கு நீடிப்பதற்கான சாத்­தி­யக்­கூ­று­கள் இருக்கின்றமையால் புத்­த­ளம் தொடக்­கம் பொத்து­வில் வரை­யான கடற்­ப­கு­தி­யி­லும் வடக்கு கடற்­ப­ரப்­பி­லும் கடற்­றொ­ழி­லுக்­குச் செல்­வ­தைத் தவிர்ப்­பது நல்­லது.

தாழ­முக்­கம் வடக்கை நோக்கி வரு­வ­தால் இன்­று­மு­தல் இரு தினங்­க­ளுக்கு காற்றின் வேகம் அதி­க­ரித்­துக் காணப்­ப­டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts