‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ : மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்திய இராணுவத்தினரை ஒருபோதும் சர்வதேசத்திடம் காட்டிக் கொடுப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

Related Posts