வடக்கு மக்களின் பிரச்சினை குறித்து ஐ.நா.விடம் கோரிக்கை

வட மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அம் மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் குறித்த கோரிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்து சமஷ்டி ஆட்சியை உருவாக்குதல் குறித்த யோசனையும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Related Posts