வடக்கு மக்களின் ஒருதொகுதி தங்கத்தை நேற்று மீளளித்தார் ஜனாதிபதி மஹிந்த!

விடுதலைப் புலிகளின் வங்கிகளில் மக்களால் அடகு வைக்கப்பட்ட மற்றும் படையினரால் கண்டெடுக்கப்பட்ட நகைகளை அவர்களுக்கு மீளக் கையளிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

Gold returned

Gold returned-2

Gold returned-3

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அயிரத்து 960 பேருக்கு தங்க நகைகள் மீளளிக்கப்பட்டன.

மன்னாரைச் சேர்ந்த 223 பேருக்கும், வவுனியாவைச் சேர்ந்த 319 பேருக்கும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 பேருக்கும், கிளிநொச்சியைச் சேர்ந்த 1,187 பேருக்கும், முல்லைத்தீவைச் சேர்ந்த 186 பேருக்குமாக 1960 பேரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தங்கங்களைக் கையளித்தார்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க உட்பட பாதுகாப்புப் பிரிவின் உயரதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Related Posts