வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் வடமாகாணத்திலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை பெற்றுக்ககொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கணினியின் உபயோகத்துடன் பிறப்பு,இறப்பு மற்றும் விவாக சான்றிதழினை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய அனைத்து மாவட்டங்களிற்கும் உரிய கணனி மயப்படுத்தப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் மூலமும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களின் பிரதிகளை யாழ் மாவட்டத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.