வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளன ஒன்றுகூடல்

வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது.

இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் தகவல்தொழில்நுட்பத்துறை வல்லுனர்களும் கலந்து பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்து தமக்கிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு ஒன்றுகூடலாக அமைந்திருந்தது .கனேடிய உலகப்பல்கலைக்கழக சேவைகள் அமைப்பின் (WUSC) அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வடக்கின் சுற்றுலா, நிர்மாணம் ,ஓட்டோ மொபைல் தொழிற்துறைசாந்தவர்களும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களின் ஊடாக விசேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் HNB வங்கியின் பிராந்திய முகாமையாளர் சுந்தரேஸ்வரன் , சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் சிவானந்தன் , யாழ் பல்கலைக்கழக கணினி விஞ்ஞான துறைத்தலைவர் கலாநிதி தபோதேரன் ,உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பதுறைத்தைலைவர் கரிகரகணபதி , யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் தேவானந்த் , WUSE நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் உட்பட நுாற்றுக்கும் மேற்பேட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மங்கள விளக்கேற்றல் அமைதிவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரையினை வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் தலைவர் தவரூபன் வழங்கினார். அவர் தனதுரையில் பிராந்தியத்தில் உள்ள தகவல்தொழில்நுட்பத்துறைசார்ந்த நிறுவனங்கள் ஒருகுடையின் கீழ் செய்ற்படவேண்டியதன் அவசியத்தையும் அதற்கு தமது அமைப்பு எவ்வாறு உதவும் அதன் நோக்கங்கள் என்பன பற்றி எடுத்துரைத்தார்

அத்துடன் ஏனைய தொழிற்துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பரஸ்பரம் நன்மைகளை அந்தந்த துறைசார்ந்தவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும். இத்துறையில் பிராந்தியத்திற்கு
வெளியில் இங்கிருந்து சேவை வழங்கும் நிறுவனங்கள் சொற்ப அளவில் தான் இருக்கின்றன என்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தற்போது நிலவும் நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து விலகி தன்னிறைவு அடைந்து பிராந்தியத்திற்கு வெளியிலும் சர்வதேச ரீதியிலும் இத்துறைசார்ந்த உற்பத்திகளையும் சேவைகளையும் சர்வதேச தரத்துடன் வழங்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதற்கு தேவையான ஆளணி மற்றும் வளங்கள் மேலும் மேப்படுத்தப்படவேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உறுப்பினர்களுக்கு தேவையான சகல வளங்களையும் அமைப்பு ரீதியாக திரட்டித்தருவதற்கு சம்மேளனம் தொடர்ந்தும் உழைக்கும் என்று தெரிவித்த அவர் பிராந்தியத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்கள் சேவைகளினது நம்பிக்கைத்தன்மையினை வளர்ப்பதற்கு தமது அமைப்பு பாடுபடும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் சேவைகளை ஏனைய தொழிற்துறையினர் வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைமையினை மாற்றமுடியும் என்றும் தெரிவித்தார்.

சகல நிறுவனங்களும் தங்களது இலத்திரணியல் அடையாளத்தினை (Digital Identity)உறுதிசெய்வேண்டும் அத்துடன் தமது சந்தைப்படுத்தல் முறைகளிலும் பாரம்பரிய முறைகளில் இருந்து வேறுபட்டு தற்போதுள்ள மேம்பாடுகளை பயன்படுத்துவதன் மூலமே நீடித்து நிலைத்துநிற்கக்கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்

உபதலைவர் யோகராஜா சர்மிக் வடக்கு தகவல்தொழில்நுட்ப சம்மேளனத்தின் உறுப்புரிமை செயற்பாடுகள் தொடர்பில் விவரணம் ஒன்றினை வழங்கினார்.

அமைப்பு உருவாக்கப்பட்டு ஒருவருடகாலத்திற்குள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னேடுத்திருப்பதாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக விளக்கினார். அனைத்து தரப்பினைரையும் உறுப்பினர்களாக இணைந்து அமைப்பினை வலுப்படுத்து மாறு கேட்டுக்கொண்டார்.

உறுப்புரிமையில் வடக்கி்ல் தலைமையகம் கொண்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் , வெளியில் பதிவுசெய்யப்பட்டு வடக்கில் கிளைகளை கொண்டு இயங்கும் நிறுவனங்கள் , தொழில்நுட்பத்துறைசார் பொது நிறுவனங்கள் , தனிநபர்கள் , புதிய பதிவுசெய்யப்படடாத நிறுவனங்கள் , புதிய தொழில்முனைவுகள் மாணவர்கள் என அனைவருக்கும் தனித்தனியே வேறுபட்ட உறுப்புரிமைகள் இருப்பதாகவும் அவற்றினை பெற்று உரிய நன்மைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் உறுப்பினர்களுக்கு சலுகை அடிப்படையில் காட்சிக்கூடங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்தெரிவித்தார்

அத்துடன் உறுப்பினர்களுக்காக இணைந்து பணியாற்றும் பொதுப்பணியிடம் ஒன்றை (Co -Working Space) அமைக்க உள்ளதாகவும் இதில் உறுப்பினர்கள் மற்றும் வளர்ந்துவரும் தகவல்தொழில்நுட்பவியல் தொழில்முனைவோர் நன்மையடைய வாயப்புக்கள் வழங்கப்பட உள்ளதாகவும் உறுதியளித்தார்.


WUSC நிறுவனத்தின் சார்பில் கனடாவின் மொன்றியலைச்சேர்ந்தவரும் இலங்கைக்கான தொழில்நுட்ப உதவி இணைப்பாளருமான திரு. றிச்சார்ட் ஆய்வுரை ஒன்றினை வழங்கினார் , ”இலங்கையின் கணினி மற்றும் தகவல் தொடர்பாடல் துறை தொடர்பில் வெளியாள் ஒருவரின் பார்வை” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

வடமாகாண நிர்மாணிகள் சங்கத்தின் சார்பில் பொறியிலாளர் நந்தரூபன் மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் செயலாளரான கிசோ அன்ரன் ஆகியோர் தங்கள் ஒன்றியங்கள் தொடர்பில் கருத்துரை வழங்கி தங்கள் தொழிற்துறைக்கு தேவையான தகவல்தொழில்நுட்பத்துறைசார்ந்த விடயங்களை எடுத்துரைத்தனர்.

அவற்றினை NCIT அமைப்புடன் இணைந்து பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரி
வித்தனர். தங்களுக்கு நேர்த்தியானதும் திருப்த்திகரமானதுமான சேவைகளையும் பொருட்களையும் NCIT உறுப்பினர்கள் வழங்கும் பட்சத்தில் விருப்புடன் பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கருத்துரைத்தனர்.


WUSC நிறுவனத்தின் சார்பில் உரையாற்றிய திமோதி இந்த நிகழ்வு தனக்கு மிகவும் திருப்தியளித்திருப்பதாகவும் தான் எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பாக அமைந்திருப்
பதாகவும் ஒருவருட முடிவிற்கு முன்னரே அமைப்பு கண்டு வரும் வேகமான வளர்ச்சியும் கட்டமைக்கப்பட்ட நகர்வுகளும் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெகுவாக பாராட்டினார்.

பெண்களின் பங்களிப்பு இத்துறையில் மேலும் வளரவேண்டும் என்றும் அதுதொடர்பிலும் கவனம்செலுத்துமாறும் அவர் சம்மேளனத்தைக் கேட்டுக்கொண்டார்.
இராப்போசனத்துடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் சந்திப்புக்கள் நடைபெற்றன. நிகழ்வில் திறந்த உரையாடல் நிகழ்வும் இடம்பெற்றது. இதில் தற்போது தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துறையில் பிராந்தியம் சார்ந்து நிலவும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள், அதற்கு NCIT எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பிலும் பலதரப்பினராலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு நிகழ்வு இரவு 10.30 இற்கு இனிதே நிறைவுற்றது.

நிகழ்வுக்கான படப்பிடிப்பு அனுசரணையினை ”கிளிக்கர்” (Clickr) வழங்கியிருந்தது.

நிகழ்வுகளின் நிழல்பட தொகுப்பு

Related Posts