வடக்கு சிங்களவர்கள் காணிகளை மீளக் கோரவில்லை!- ஜனக பண்டார

janakana_pereraவடக்கு சிங்களவர்கள் காணிகளை மீளக் கோரவில்லை என காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

போருக்கு முன்னர் வடக்கில் தங்கியிருந்த சிங்கள மக்களுக்கு அவர்களது காணிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் சிக்கலுக்குக் காரணம் அவர்கள் காணிகளை மீளக் கோராமையேயாகும்.

காணிகளை மீள வழங்குமாறு சிங்களவர்கள் உத்தியோகபூர்வமாக கோரவில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த சிங்களவர்களை புலிகள் விரட்டியத்துள்ளனர்.

காணிகளை மீளக் கோரும் வரையில் காணி அமைச்சு காத்திருப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Related Posts