வடக்கு, கிழக்கை இணையோம்; பொலிஸ் அதிகாரத்தை வழங்கோம்! – இது தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு என்ன?

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில்லை என்பதும் நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதில்லை என்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் தெளிவான கொள்கையாகும். ஆனால், இந்த விடயங்களில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.

gl peris

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால தமிழ்த் தேசியக் கூடமைப்புடன் இரகசிய உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்கியுள்ளார்.

அந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் என்ன? அதில் எட்டப்பட்ட உடன்பாடுகள் என்னவென்று நாட்டுக்கு கூறவேண்டும். இந்த விடயனகளை நாட்டு மக்களுக்குக் கூறாமல் வாக்குக் கேட்பது எந்தவகையில் நியாயம்? என்று அவர் கேள்வியெழுப்பினார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவின் நிலைப்பாடு என்ன? என்றும் அவர் வினவினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேற்படி விடயங்களைக் கூறினார்.

Related Posts