வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்க : ஜனாதிபதி பணிப்பு

யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் எழுந்துள்ள செயன்முறை நெருக்கடிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அவற்றுக்கான தீர்வுகளையும், யோசனைகளையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. அந்தந்த மாகாணங்களில் ஆளுநர்களின் தலைமையில் மீள்குடியேற்ற குழுக்களை கூட்டி, நிலவும் பிரச்சினைக்கு தீர்வுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதேவேளை. மாவட்ட செயலாளர்களின் அறிக்கைகளில் மாத்திரம் தங்கியிருக்காது மாவட்ட மட்டத்தில் மீள்குடியேற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related Posts