வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
மின்கட்டணம் எந்த வகையிலும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு பற்றி விவாதிக்கப்படுகிறது. இதன்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்மானி வாசிப்பாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். இதனால் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மின்மானி வாசிப்பு இடம்பெறுகின்றது.