வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சரவை உபகுழு ஜனாதிபதியால் நியமிப்பு!! முதலமைச்சர் புறக்கணிப்பு!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை விரைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி சிறப்புச் செயணியில் ஆராயப்படும் விடயங்களை அமைச்சரவைக்குத் தெரிய்படுத்தி அவற்றை உடனே நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த செயலணியில் முதலாவது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன் முதலாவது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது.

ஆரம்பத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். போர் முடிந்து 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் அபிவிருத்தி இடம்பெறவில்லை அரசு மேற்கொள்ண்ட திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை. சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதாகச் சொல்லியும் அது நடைபெறவில்லை.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தி­யைத் துரி­தப்­ப­டுத்­த­வேண்­டும். இந்­தச் செய­லணி ஊடாக அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது இறுக்­க­மான கண்­கா­ணிப்­பும் இருக்­க­வேண்­டும். திறை­சேரி இந்­தச் செய­லணி ஊடான திட்­டங்­க­ளுக்­குப் போது­மான நிதியை வழங்­க­வேண்­டும்.

தனி­யார் துறை­யி­ன­ரின் முத­லீடு உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டும். சிவில் சமூ­கத்­தி­ன­ரது பங்­க­ளிப்­பும் பெற்­றுக் கொள்­ளப்­ப­ட­வேண்­டும். கொழும்பு அர­சை­யும், மாகாண அர­சை­யும் ஒருங்­கி­ணைத்­துச் செயற்­ப­டு­வது இந்­தச் செய­ல­ணி­யின் முக்­கிய நோக்­க­மா­கும் என்று அரச தலை­வர் தனது உரை­யில் தெரி­வித்­தார்.

அரச தலை­வ­ரின் உரை­யைத் தொடர்ந்து, செய­ல­ணி­யின் செய­லர் வி.சிவ­ஞா­ன­சோதி உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை­யைத் தொடர்ந்து வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற முக்­கிய அபி­வி­ருத்­திப் பணி­க­ளின் தொகுப்பு காண்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண ஆளு­நர் குரே தனது உரை­யில், வீடு­க­ளின் தேவை வடக்கு மாகா­ணத்­தில் அதி­க­மாக இருக்­கின்­றது. ஆனால் மன்­னார் மாவட்­டத்­தில் ஏதோ­வொரு அமைச்­சால் அமைக்­கப்­பட்ட வீடு­கள் மக்­கள் இல்­லா­மல் பூட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. மறு­பு­றம் அதே மாவட்­டத்­தில், மாகா­ணத்­தில் வீடு­கள் இல்­லா­மல் மக்­கள் இருக்­கின்­றார்­கள்.
அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­கள் வடக்­கில் முன்­னெ­டுக்­கப்­ப­டும்­போது கொழும்பு அர­சுக்­கும், மாகாண அர­சுக்­கும் இடை­யில் ஒருங்­கி­ணைப்பு இல்லை. தேசிய உற்­பத்­திக்கு வடக்­கி­லி­ருந்து பங்­க­ளிப்­புச் செய்­யப்­ப­டும் வீதம் குறை­வா­கவே உள்­ளது. அதனை ஒரு­வ­ரும் கவ­னிக்­க­வில்லை.

அமைச்­சர் சுவா­மி­நா­தன், மன்­னார் மாவட்­டத்­தில் நான் கட்­டிய வீடு­கள் எது­வும் மக்­கள் இல்­லா­மல் இருக்­க­வில்லை என்று குறிப்­பிட்­டார். ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வடக்கு – கிழக்கு மக்­க­ளுக்­காக 50 ஆயி­ரம் வீடு­களை கட்­டும் வேலைத்­திட்­டத்­தின் கீழ் 25 ஆயி­ரம் வீடு­க­ளின் கட்­டப் பணி­களை எதிர்­வ­ரும் ஓகஸ்ட் மாதத்­தில் ஆரம்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­து­டன், மேலும் 10 ஆயி­ரம் வீடு­க­ளின் கட்­டப் பணி­கள் 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் கடந்த காலங்­க­ளில் இயங்­கிய தொழிற்­சா­லை­களை மீள இயக்­கு­வது தொடர்­பி­லும் கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்­டுள்­ளது. அந்­தத் தொழிற்­சா­லை­களை மீள ஆரம்­பிப்­பது சரி­யாக இருக்­குமா? அத­னால் பாதிப்­புக்­கள் ஏதா­வது ஏற்­ப­டுமா? என்­பது தொடர்­பில் ஆராய்ந்து அடுத்த கூட்­டத்­தில் அறிக்கை சமர்ப்­பிக்­கப் பணிக்­கப்­பட்­டுள்­ளது.

காங்­கே­சன்­து­றை­மு­கம் அபி­வி­ருத்தி, காங்­கே­சன்­துறை சிமெந்து தொழிற்­சாலை, திக்­கம் வடி­சாலை, கிளி­நொச்சி பரந்­தன் இர­சா­யன தொழிற்­சாலை, கிளி­நொச்சி குறிஞ்­சித் தீவு உப்­ப­ளத் தொழிற்­சாலை, முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்­டான் ஓட்­டுத் தொழிற்­சாலை, அம்­பாறை சீனித் தொழிற்­சாலை, மட்­டக்­க­ளப்பு கட­தா­சித் தொழிற்­சாலை என்­பன தொடர்­பி­லேயே அறிக்கை சமர்ப்­பிக்க அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இரு மாகா­ணங்­க­ளி­லும் ஆயி­ரத்து 847 கிலோ மீற்­றர் அள­வி­லான பாதை அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. யாழ்ப்­பா­ணம், மயி­லிட்டி, மீன்­பி­டித்­து­றை­மு­கத்­தின் அபி­வி­ருத்தி பணி­க­ளை­யும் ஆரம்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன் இரு மாகா­ணங்­க­ளி­லும் கிரா­மிய பாதை­கள், குடி­நீர் வசதி, நீர்ப்­பா­ச­னம், விவ­சா­யம், பொரு­ளா­தார நிலை­யங்­கள், பாட­சா­லை­கள், மருத்­து­வ­ம­னை­கள், சுகா­தார நிலை­யங்­கள் உள்­ளிட்ட சகல உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளி­லும் விரி­வான அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு தேவை­யான ஆள­ணியை இரா­ணு­வத்­தி­னர் வழங்­கத் தயா­ராக இருப்­ப­தாக, இரா­ணு­வத் தள­பதி சந்­திப்­பில் கூறி­யுள்­ளார்.

அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் ஆரா­யும் விட­யங்­களை அமைச்­ச­ர­வைக்­குத் தெரி­யப்­ப­டுத்தி, உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால குறிப்­பிட்­டுள்­ளார். அதற்­காக அமைச்­ச­ரவை உப­கு­ழுவை அமைக்­க­வும் தீர்­மா­னித்­துள்­ளார்.

இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேறு நிகழ்வொன்றுக்கு சென்றமையால் பங்குபற்றவில்லை ஆனால் அமைச்சர்கள் பங்குகொண்டிருந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தான் இந்தக் கூட்டத்தில் பங்குகொள்ளப்போவதில்லை என ஜனாதிபதிக்கு முன்னர் அறிவித்திருந்தார். எனினும் பின்னர் இந்த முடிவை மாற்றிக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முதலமைச்சர் தீர்மானித்தார். பிறகு இறுதி நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியுள்ளார். கூட்டம் தொடங்கிய நேரத்திலேயே செயலணியின் செயலாளருக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

Related Posts