எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிக்கும் தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அனுப்பி வைத்துள்ளனர்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த கால வன்செயல்களைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் வாழ்ந்த மக்கள் பெருமளவில் வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியில் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் தமிழ்க் கட்சிகள் பல வடக்கு,கிழக்குக்கு வெளியே ஒன்றிணைந்துள்ளன. மனோ கணேசனை தலைமையாகக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஒன்றிணைந்துள்ள தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தேர்தலில் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்குக்கு வெளியில் போட்டியிட கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். எனக் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.