வடக்கு கிழக்கில் 65,000 வீடுகள்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சினால் 65,000 வீடுகளை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிர்மானிப்பதற்கான அங்குராப்பண நிகழ்வு நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் செல்வபுர கிராமத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

new-home-1

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் வீட்டுத் திட்டங்களை பார்வையிட்டார்.

இவ்வீட்டுத் திட்டங்கள் அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் நிர்மானிக்கப்படவுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படயிருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்த வீடு இன்னமும் முழுமை பெறவில்லை. மூன்று தினங்களுக்குள் இதனைப் பூர்த்தி செய்து விடுவார்கள். அதன் பின்னர் மக்கள் இந்த வீட்டைப் பார்க்கட்டும். எத்தனையோ பத்திரிகைகள் இந்த வீட்டைப் பற்றி எதிராக எழுதியுள்ளார்கள். ( ஊடகவியலாளர்களைப் பார்த்து ) நீங்கள்தான் இந்த வீடு தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை வைக்கின்றீர்கள்.
நீங்களே இந்த வீட்டைப் பாருங்கள். உங்கள் மனதுக்கு இதனை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா ? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படும் போது எதிர்ப்பு இல்லாமல் நடக்காது. எல்லாவற்றிலும் குறைகூறிக் கொண்டிருந்தால் முன்னேற்றம் காண முடியாது. நாங்களும் தமிழர்கள்தான். தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என்றார்.

ஒரு வீட்டின் பெறுமதி 10 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளன.

Related Posts