வடக்கு, கிழக்கில் 12 ஆயிரம் வீடுகளை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

india_houseவடக்கு கிழக்கு பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென 12 ஆயிரம் வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பெர்னாட் சாவேஜ்,கடந்த வெள்ளியன்று பிரதமர்டி.எம்.ஜயரட்ணவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போதே அவர் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.

இதன்படி அடுத்த வருடம் 12000 வீடுகள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்படுமெனவும், இதற்கான ஏற்பாடுகளைத் தற்போது ஐரோப்பி ஒன்றியம் செய்து வருதாகவும்இதற்கென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்குஅடுத்த மாதம் வரவுள்ளதாகவும், இலங்கையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தனது பூரண ஆதரவை வழங்கும் என்றும் சாவேஜ் தெரிவித்தார்.

Related Posts