வடக்கு- கிழக்கில் வன்முறைகளை கண்காணிக்க பொலிஸார் குவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலங்களில் அதிகரித்து வரும் தேர்தல் வன்முறைகள் காரணமாக இவ்வாறு பொலிஸாரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

மேலும் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களது தேர்தல் அலுவலகம் எரிக்கப்படுகின்றமையும் ஆதரவாளர்கள் தாக்கப்படுகின்றமையும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற நிலையில் பொலிஸாரின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டது.

இதனைவிட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது உத்தரவில் வேட்பாளர்களும் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் எனக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts