வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 100 மில்லி மீற்றர் மழை பெய்கக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரே மழை பெய்யக்கூடும் என்றும் தற்காலிகமாக கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னல் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.