வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, ஆட்சியில் அமர்ந்ததும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம்!!!

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் வடக்கு கிழக்கில் வாழும் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்ததுடன் அதன் முதற்கட்டமாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் உடனடியாக 30 ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஏனையோருக்கும் விரைவாக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

Related Posts