வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும்: பிரிட்டன்

இலங்கையின் ஏனைய பாகங்களிலுள்ள நிலைமையை ஒத்ததாக வடக்கு கிழக்கிலும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் என தான் நம்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான வருடாந்த அறிக்கையின் வீடியோவில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரன்கின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாடெங்கும் சாதாரண இராணுவ முகாம்கள் இருப்பதை ஐக்கிய இராஜ்ஜியம் அங்கீகரிக்கிறது. ஐக்கிய இராஜ்ஜியத்திலும் இவ்வாறு உள்ளது. யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் தற்போது தொடர்ந்திருக்கும் அதிக இராணுவ பிரசன்னத்திற்குப் பதிலாக, இலங்கையின் ஏனைய பாகங்களில் உள்ள நிலைமைக்கு ஒத்தாக வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ பிரசன்னத்தை நகர்த்த முடியும் என நாம் நம்புகிறோம்” என அவர்கூறியுள்ளார்.

Related Posts