வடக்கு கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைக்கு ஜப்பான் அரசு நிதி உதவி

cashவடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் மேலும் 107 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு உதவும் வகையிலேயே இந்நிதியுதவி வழங்கப்படவிருப்பதாகவும்,

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஹலோடிரஸ்ட் அமைப்பின் ஊடாக இந்நிதியுதவி வழங்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 3,025 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

ஜப்பானின் அடிமட்டத்திலான மனிதப் பாதுகாப்புத் திட்டத்தின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு இந்த நிதியுதவி ஜப்பானால் வழங்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஹலோடிரஸ்ட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பார்த்தலோமி டிக்பி தெரிவித்தார்.

ஜப்பானின் நிதியுதவியுடன் 660 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதுடன் 23,000ற்கும் அதிகமான வெடிக்காத கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts