வடக்கு கடலில் வைத்து 12 இந்திய மீனவர்கள் கைது !

பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட போது குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Posts