வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற விடயம் எதிர்வரும் 06.12.2016 அன்று மாகாண சபையின் அமர்வின் போது, தெரியவரும் என, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
நேற்றைதினம் யாழ் மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் தற்போதை எதிர்கட்சித் தலைவர் சி.தவராஜா மற்றும் அதே கட்சியினை சேர்ந்த நபர் தவநாதன் ஆகியோருடன் சந்திப்பை நான் நடாத்தியுள்ளளேன்.
இதன் அடிப்படையில் வட மாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் யார் என்ற உண்மை வடமாகாண மக்களுக்கு தெரியவரும், என்றார்.
ஈழ மக்கள் ஐனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் இவ் எதிர்கட்சியின் தலைவர் குறித்த கோரிக்கை உள்ளடங்கிய அறிக்கை ஒன்று மாகாண சபையின் அவைத் தலைவரிடம் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.