வடக்கு இளைஞர் யுவதிகளுக்காக 7 தொழிற்பயிற்சி நிலையங்கள்

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு இளைஞர் யுவதிகளுக்காக 7 தொழிற்பயிற்சி நிலையங்கள்ஆரம்பிக்கப்படவுள்ளன என பிரதி கல்வி அமைச்சரும் இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மொஹான்லால் கிரேரோ தெரிவித்தார்.

mohan-laal-kererooவரவுசெலவு 2015 வின் மூன்றாவது முறை வாசிப்பின் தெரிவுக்குழு சந்தர்ப்பத்தின் ஒன்பதாம் நாள் வாசிப்பின் விவாதத்தின் நேற்று (13) பாராளுமன்றில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.30 மணிவரை இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சின் 156 மற்றும் 215 நிதி தொடர்பில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் யுனிசெப்பின் நிதியினூடாக மன்னாரில் புதிய தொழில்நுட்ப கல்லூரியொன்றும் ஜெர்மனி நிதியினூடாக கிளிநொச்சியில் முழுமையான வசதிகளுடன் கூடிய தொழில்பயிற்சி நிலையமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் கீழ் பாடசாலைகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்வி ஆரம்பிக்கப்பட்ட 250 பாடசாலைகளின் மாணவர்களுக்காக தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்க இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சினால் 448 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய இளைஞர் கொள்கையை முன்வைக்க நாம் நடவடிக்கை எடுத்தோம். இளைஞர்கள் பற்றி கொழும்பு பிரகடனத்தை முன்வைத்து அதனை உலக பிரகடனமாக மாற்ற எமது அமைச்சு நடவடிக்கை எடுத்தது. சர்வதேச மற்றும் தேசிய பயிற்சித் திட்டங்களை இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். இவ்வமைச்சினூடாக இளைஞர் யுவதிகளுக்காக பாரிய பணியை நாம் ஆரம்பித்தோம்.

சமுத்திர பல்கலைக்கழத்தை ஆரம்பித்து நாட்டைச் சுற்றியுள்ள சமுத்திர வளத்தை இளைஞர்களுக்காக பெற்றுக்கொடுக்கிறோம். இளைஞர்களுக்கான தொழில் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கையெடுத்துள்ளதுடன் வருடாந்தம் குறை வருமானமுடையவர்களுக்காக 50,000 புலமை பரிசில்கள் வழங்கியுள்ளோம்.

அதில் தெரிவு செய்யப்பட்டோருக்கு 3000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.கிராமிய பிரதேசங்களில் இளைஞர்களை உதவியாளராக இணைத்துக்கொண்டு அவர்களுக்கு மாதம் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் 163,339 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான NVQ சான்றிதழ்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் 4 வருட காலத்தினுல் இளைஞர் அபிவிருத்திக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

யுனிடெக் பல்கலைக்கழம் ஆரம்பிக்கப்பட்டு பட்டதாரி தரத்திற்க்கு இளைஞர்கள் உயர்த்தப்பட்டுள்ளனர். தனியார் பிரிவுகளுடன் தொடர்புடைய 3 பல்கலைக்கழகங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச பிரிவினூடாக தொழிற்கல்வி பல்கலைக்கழகங்கள் ரத்மலான- குளியாபிட்டிய- போன்ற 3 பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்ட பாட விதானங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன NSBM பல்கலைக்கழக கட்டுமானப்பணிகள் 2015ஆம் ஆண்டு முடிக்கப்படும்.

சாதாரண கல்வித்துறையில் நிலவும் தொழில் குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிபுணத்துவ தினம் பிரகடனப்படுத்தப்படுத்தி இளந்தலைமுறையினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றுகொடுக்க நாம் செயற்படுகிறோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Related Posts