வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய இராணுவ முகாம்களை அகற்றிக்கொள்ள முடியாது.
வன்னிப் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குலக நாடுகளின் சில தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் அடிக்கடி வடக்கிற்கு விஜயம் செய்து இராணுவ முகாம்கள் பற்றி மக்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இராணுவ முகாம்கள் அகற்றிக்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.