ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியிலுள்ள ஹிந்து குஷ் மலைப் பகுதியிலுள்ள ஃபைசாபாத்துக்கு 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 7.7 அளவு சக்திகொண்ட இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்துக்கு உணரப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
நிலநடுக்கத்தை அடுத்து, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தகவல்தொடர்புகளும், மின்சாரமும் தூண்டிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதுப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.