வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நான்குவழி சாலைகளைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக 520 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்தது.
என்டேரமுல்லையில் இருந்து தம்புள்ளை வரை முதற்கட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மீரிகம, பொத்துஹர, குருநாகல், மெல்சிறிபுர மற்றும் கலேவல ஆகிய நகரங்களினூடாகவே இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
கண்டி நுழைவாயிலும், இதற்கு சமமாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் பொத்துஹரவில் ஆரம்பிக்கப்படும் இந்த நெடுஞ்சாலை கன்னொருவவில் முடிவடையும்.
இந்த நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இம்மாத நடுப்பதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இது கலேவல, கலகெதர, ரம்புக்கன ஊடாக குருநாகல் வரை நிர்மாணிக்கப்படம்.
2018ஆம் ஆண்டில் இந்த நிர்மாணப் பணிகள் முடிவடையும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்தது.