வடக்குத் தேர்தல் பெப்ரவரி 26 இல்?

வடமாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பெப்ரவரி இறுதியில் அதாவது 26 அந்தத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளது என தெரிகிறது.முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசு திட்டமிருந்தது ஆனபோதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பகுதியில் நடைபெற்றுள்ளதால்,அதற்கு முன்னர் இத் தேர்தலை நடத்துவதற்கு அரசு முடிவெடித்துள்ளது.

இதேவேளை வடமாகாணசபைத் தேர்தலின் முதலமைச்ர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.வடமாகாணத்தை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அரசு உத்தேசித்திருந்தது. ஆனால் இப்போது இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்திருக்கும் அரசு. வட மாகாணத்தில் பிரபல்யம் பெற்ற புத்திஜீவி ஒருவரை தேர்தல் களத்தில் இறக்குவதற்கு ஆலோசித்து வருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் போராசிரியர்கள் சிலரினதும் ஓய்வு பெற்ற கல்விமான்கள் சிலரினதும் பெயர்களும் இதற்காக பரீசீலிக்கப்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Posts